
ஈராக்கில் மத்திய பாக்தாத்திலுள்ள ஹோட்டல்களுக்கு வெளியில் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் இடம்பெற்ற இரட்டைக் கார் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந் துள்ளனர்.
முதலாவது குண்டு வெடிப்பு பபிலோன் ஹோட்டலுக்கு வெளியிலும் இரண்டாவது குண்டு வெடிப்பு இஷ்தார் ஹோட்டலுக்கு வெளியிலும் இடம்பெற்றுள்ளன.
பாக்தாத் நகரில் சுமார் 12 வருட காலமாக நடைமுறையிலிருந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் கடந்த பெப்ரவரி மாதம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் பபிலோன் ஹோட்டலின் கார் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது கார்க் குண்டொன்றை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் புதுப்பிக்கப்பட்ட அந்த இரு ஹோட்டல்களும் வியாழக்கிழமை இரவுகளில் சுறுசுறுப்பாக செயற்படுவது வழமையாகும்.
2010 ஆம் ஆண்டில் மேற்படி ஹோட் டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்களில் 30 பேருக் கும் அதிகமானோர் பலியாகியிருந்தனர்.
No comments:
Post a Comment