அண்மைய செய்திகள்

recent
-

கவர்ச்சிகரமான செயற்திறனை பதிவு செய்துள்ள ஜனசக்தி இன்சூரன்ஸ்


2014ஆம் ஆண்டு தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வில் இரு தங்க விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ள ஜனசக்தி நிறுவனமானது ஒவ்வொரு வீடுகளிலும், பணியிடங்களிலும் காப்புறுதி விளக்கினை ஏற்றி வைப்பதற்கான அதன் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல எதிர்பார்த்துள்ளது. கட்டுப்பாட்டு சீர்திருத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஜனசக்தி பொது காப்புறுதி லிமிடெட் எனும் அதன் புதிய நிறுவனத்தை ஸ்தாபித்த பின்னர் முதலாவது காலாண்டில் 13.4% ளர்ச்சியை ஜனசக்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியுடன் செயற்பாடுகளை ஆரம்பித்த இந்த புதிய நிறுவனமானது ஆயுள் சாராத காப்புறுதி வர்த்தகத்தை கையாண்டு வருகின்றது. தாய் நிறுவனமான ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனம் ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தை முன்னெடுத்து வருகிறது. 2015 ஆம் ஆண்டிற்கான முதலாவது காலாண்டு செயல்திறன் தொடர்பில் ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜுட் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில், “கடந்த 2014 ஆண்டு பெற்ற நிகர வழங்கப்பட்ட தவணைக்கட்டணம் (GWP)இனை விடவும் இவ்வாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் 300 மில்லியன் ரூபாவினை அதிகமான பெற்று 2.5 பில்லியன் ரூபாவை ஜனசக்தி பதிவு செய்துள்ளது. இது நிறுவனத்திற்கு ஆரோக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளதுடன், இந்த வளர்ச்சி வேகத்தினை தொடர எதிர்பார்த்துள்ளோம்” என்றார். ஜனசக்தி பொது காப்புறுதி லிமிடெட்(ஆயுள் சாராத காப்புறுதி பிரிவின்) நிறுவனம் கடந்தாண்டு பதியப்பட்ட நிகர வழங்கப்பட்ட தவணைக்கட்டணம் ரூ.1.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 1.9 பில்லியன் ரூபாவினை பதிவு செய்துள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சியில் 12.0% இனை பிரதிபலிக்கிறது. 2014 இல் ஆயுள் காப்புறுதி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சாதகமான விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.605 மில்லியன் GWP இதனை உறுதிப்படுத்துவதுடன், 2015இன் முதலாவது காலாண்டின் வளர்ச்சி இலாகாவினை 17.8% இனால் அதிகரிக்கச் செய்துள்ளது. இதற்கு மேலதிகமாக, தற்போதைய சந்தை நிலையில் 2015 இன் முதலாவது காலாண்டில் 1.1 பில்லியன் ரூபா நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை வழங்கி இந் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. 2015 இன் முதலாவது காலாண்டு இறுதியில் நிறுவனத்தின் மொத்த சொத்து பெறுமதி 21.01 பில்லியன் ரூபாவை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது நிறுவனத்தின் இலாப வழங்கல்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பிரகாஷ் ஷாஃப்ட்டர், “இந்த குழுமம் கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் தேறிய இலாபமாக ரூபா 156 மில்லியனாக காணப்பட்ட நிலையில், இந்த காலாண்டு இறுதியில் ரூ.106 மில்லியனை ஈட்டியுள்ளது. இந்த இலாப வீழ்ச்சிக்கு இதே காலப்பகுதியில் ஏற்பட்ட 71 மில்லியன் ரூபா சந்தை இழப்பு மிக முக்கிய காரணமாகும். இருப்பினும், பங்குச்சந்தையின் அடுத்தடுத்த நேர்மறை இயக்கமானது நிறுவனத்தை இந் நிலைமையிலிருந்து மீட்க உதவியாக அமைந்தது. அத்துடன் எதிர்காலத்தில் எமது செயற்திறனை மேம்படுத்தவுள்ளோம்” என தெரிவித்தார். ஜனசக்தி நிறுவனமானது 2015இன் முதலாம் காலாண்டில் அதன் உற்பத்தி புத்துருவாக்கங்கள் ஊடாக வர்த்தககுறியீட்டு உரித்துடைமை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றை கட்டியெழுப்பியுள்ளது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யபட்ட Easy claim திட்டமானது வாடிக்கையாளர்கள் மத்தியில் சாதகமான வர்த்தக குறியீட்டு விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையை உருவாக்கியுள்ளது. Easy Claim திட்டம் என்பது எந்தவித தாமதமுமின்றி வாடிக்கையாளருக்கு தமது நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை ATM ஊடாக பெற்றுக்கொள்ள உதவும் மிகச்சிறந்த திட்டமாகும். இந் நிறுவனம் அதன் பல்வேறு CSR செயற்பாடுகள் ஊடாக சமூகத்திற்கு பெறுமதி சேர்க்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஓர் அங்கமாக, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நாடுமுழுவதும் வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நுவரெலியா பிரதேசத்தில் வீதிப் பாதுகாப்பு திட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனசக்தி நிறுவனமானது அதன் மக்கள் மற்றும் சக்திமிக்க அர்ப்பணிப்பு மற்றும் சந்தை தேவைகளுக்கான பிரதிபலிப்பு போன்ற தனிச்சிறப்புமிக்க செயற்திறன்களை தொடரவுள்ளதுடன், 2015 ஆம் ஆண்டிலும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யவுள்ளது.
கவர்ச்சிகரமான செயற்திறனை பதிவு செய்துள்ள ஜனசக்தி இன்சூரன்ஸ் Reviewed by Author on May 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.