கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை
கிளிநொச்சியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமியை வழிமறித்த சிலர், அவரைக் கடத்தி பொதுமலசல கூடத்துக்குள் வைத்து வல்லுறவுக்குட்படுத்தியள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்புணர்விற்குள்ளாக்கப்பட்ட சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
வாயில் துணி அடைந்தபடி மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சிறுமி மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சிப் பொலிஸார் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட கொந்தளிப்பு அடங்கும் முன் மற்றுமொரு சிறுமிக்கு இக்கொடூரம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை
Reviewed by NEWMANNAR
on
May 27, 2015
Rating:

No comments:
Post a Comment