முழுக்க முழுக்க பனிக்கடியால் வடிவமைக்கப்பட்ட ஹொட்டலா?
ஸ்வீடனில் ஐஸ் கட்டியினால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகவும் புகழ் பெற்ற ஐஸ் ஹொட்டல் அமைந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம், அருகே சுமார் 1350 கி.மீ தொலைவில் இருக்கிறது கிருனா என்ற நகரம்.
அங்கிருந்து மிக அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமமான ஜுக்காசார்வி என்ற இடத்தில், தான் இந்த அதிசய ஐஸ் ஹொட்டல் உள்ளது.முழுக்க முழுக்க பனிக்கடியினால் வடிவமைக்கப்படும் இந்த ஹொட்டல் வருடத்திற்கு வருடம் சில கலைஞர்களின் முயற்சியால் மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமான தலைப்புகளில் இந்த ஹொட்டல் ஆண்டுதோறும் வடிவமைக்கப்படுகிறது. சுமார் நூறு பேர் இந்த பனிக்கட்டியைக் கொண்டு அழகான வடிவமைப்புகளை உருவாக்குகின்றனர். 60 அறைகள் கொண்ட இந்த பனிக்கட்டி ஹோட்டலில் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பனிக்கட்டியால் சூழப்பட்ட அறைகளாக இருந்தாலும் கதகதப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹொட்டல் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் கட்டப்பட்டு பிறகு கோடை காலத்தில் கரைந்து ஓடிவிடும். 1990ம் வருடத்தில்தான் இந்த ஹோட்டல் முதலில் கட்டப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு வருடமும் வேறுவேறு வடிவமைப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த ஐஸ் ஹோட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு சாதாரண அறைக்கு 185 டொலர் மற்றும் மிக ஆடம்பரமான அறையில் தங்குவதற்கு 1000 டொலர் வசூலிக்கப்படுகிறது.
முழுக்க முழுக்க பனிக்கடியால் வடிவமைக்கப்பட்ட ஹொட்டலா?
Reviewed by Author
on
May 30, 2015
Rating:
Reviewed by Author
on
May 30, 2015
Rating:







No comments:
Post a Comment