அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்தவின் தோல்விக்காக என் மீது சேறு பூசப்படுகின்றது!– ஜோதிடர் சுமணதாச புலம்பல்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்காக என் மீதே சேறு பூசப்படுகின்றது என மஹிந்தவின் முன்னாள் பிரதம ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தமையினால், முன்னாள் அமைச்சர்கள் சிலர் என் மீது சேற்றை அள்ளி வீசி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு நானே காரணம் என சில முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சுமத்துகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தமக்கு எவ்வித கெடுதலையும் செய்யவில்லை. எங்கோ செல்பவர்களே என்னை துன்புறுத்தி சேறு பூசி வருகின்றனர் என சுமணதாச சிங்களப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். இதேவேளை. ஜோதிடர் சுமணதாசவின் ஆலோசனையின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவிக் காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஜனாதிபதி தேர்தலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தோற்றது மகிந்த! அவதூறுகளை எதிர்கொள்வது நான் – சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன புலம்பல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததன் காரணமாக சில முன்னாள் அமைச்சர்களின் சேறுபூசும் தாக்குதல்களை தான் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பிரபல சோதிடரான சுமணதாச அபேகுணவர்தன, முன்னாள் ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடராக பணியாற்றி வந்தார். முன்னாள் ஜனாதிபதியின் தோல்விக்கு தானே காரணம் என சில முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதுடன் தனது தோளில் ஏற முயற்சிப்பதாகவும் சுமணதாச குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அல்லது அவரது குடும்பத்தினரிடம் இருந்து தனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை என கூறியுள்ள சுமணதாச, வெளியில் இருப்பவர்கள் தன்னை பிரச்சினைக்குரியவராக மாற்றிகொண்டுள்ளது சிக்கலுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தற்போது இவ்வாறு கூறியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்பார் என்று அறிந்தும் தானே அவர் தேர்தலை நடத்த வழிவகுத்ததாக தெரிவித்திருந்தார். அத்துடன் நாட்டை அழிவில் இருந்து பாதுகாத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்தவின் தோல்விக்காக என் மீது சேறு பூசப்படுகின்றது!– ஜோதிடர் சுமணதாச புலம்பல் Reviewed by Author on May 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.