
கடந்த ஒன்பது வருடங்களில் 5626 பேருக்கு இராணுவ நீதிமன்றின் ஊடாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஒழுக்க மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் படைத்தரப்பைச் சேர்ந்த 421 உயர் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
2006ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றின் ஊடாக 5205 படைச் சிப்பாய்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற 2009ம் ஆண்டில் 184 அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
2006ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 18ம் திகதி காலி துறைமுகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை முறியடிக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அப்போதைய உயர் கடற்படை அதிகாரி மஹில் மெண்டிஸிற்கும் இராணுவ நீதிமன்றின் ஊடாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை. இலங்கை அரச படையினர் ஒழுக்க விதிகளை மீறியதில்லை. குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என ஆட்சி செய்த ஆட்சி செய்யும் அரசாங்கத் தரப்புக்களும் பேரினவாத சக்திகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment