பொதுத் தேர்தலில் மஹிந்த போட்டியிடுவது உறுதி ?
எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´ தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ´சின்ஹூவா´ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
“தமக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும் ´சின்ஹூவா´ செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அரசியல் காய்நகர்த்தும் செயற்பாட்டில் மஹிந்த தரப்பு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொதுத் தேர்தலில் மஹிந்த போட்டியிடுவது உறுதி ?
Reviewed by Author
on
May 27, 2015
Rating:

No comments:
Post a Comment