மடுவில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஸ்ரிப்பு-Photos
உலக புகையிலை ஒழிப்பு தினம் இன்று வியாழக்கிழமை(28) மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் அனுஸ்ரிக்கப்பட்டது.
மடு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து மடு பிரதேச செயலகம் மற்றும் பெரிய பண்டிவிருச்சான் கிராம மக்கள் ஆகியோர் இணைந்து விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.
குறித்த ஊர்வலத்தில் மடு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி,சுகாதார திணைக்கள பணியாளர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,மடு பிரதேச செயலக பணியாளர்கள் கிராம அலுவலகர்கள்,மக்கள் என பலர் குறித்த விழிர்ப்புனர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் மாணவர்களுக்கு புகையிலை ஒழிப்பு தொடர்பிலும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மடுவில் உலக புகையிலை ஒழிப்பு தினம் அனுஸ்ரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
May 28, 2015
Rating:

No comments:
Post a Comment