
துபாயில் பெண்மணி ஒருவர் தனது வீட்டின் படுக்கையறையில் தூங்கிக்கொண்டிருந்த மர்மநபருடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். புர்துபாய் குடியிருப்பில் வசித்து வரும் இவர், வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
வீட்டுக்குள் சென்ற அவர் தனது படுக்கையறையில் போதையில் ஒரு நபர் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட இவர், உடனடியாக பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிசார் வருவதற்குள், நல்ல உறக்கத்தில் இருந்த அந்த நபருடன் இணைந்து செல்பி எடுத்து வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த செல்பிக்கு அவர் அளித்த விளக்கத்தில், வீட்டுக்குள் நுழைந்ததும் என் படுக்கையறையில் குடிகாரர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். அவர் என் வீட்டில் திருட முயற்சித்துள்ளார். ஆனால் அது நடைபெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த நபர் திருடன் அல்ல, குடியிருப்பில் வேலை பார்க்கும் தனது நண்பனை பார்க்க வந்த அவர், அவரது நண்பருடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர் இந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த அவர் போதையில் அங்கேயே தூங்கிவிட்டார், தற்போது அவரை கைது செய்துள்ளோம் என்று துபாய் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment