மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணியை பார்வையிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்.-Photos
மன்னாருக்கு இன்று(30) சனிக்கிழமை விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை மற்றும் முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களுக்குச் சென்று மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக்கின் வேண்டுகோளுக்கு அமைவாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமி நாதன் இன்று(30) சனிக்கிழமை மதியம், சிலாவத்துறைக்கு விஜயம் செய்திருந்தார்.
மீள்குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அக்கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றியும் இங்கு கலந்து கொண்டிருந்த மக்களால் பாராளுமன்ற உறுப்பினர், மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிராம மக்களால் பாதை, வீட்டுத்திட்டம், குடி நீர் இன்மை, உள்ளக மின் இணைப்பு, மற்றும் போக்குவரத்து போன்ற முக்கிய சில தேவைகள் முன்வைத்தனர்.
மீள் குடியேற்றத்தில் முசலி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரத்தை நிறுவி அதன் ஊடாக உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக் மீள் குடியேற்ற அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கமைவாக இடம் பெயர்ந்து வாழும் முள்ளிக்குளம் கிராம மக்களை அமைச்சர் சுவாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்திருந்தார்.
இதேவேளை முள்ளிக்குளம் கிராமத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதாகவும்,அந்த மக்களின் தொழில் வாய்ப்புக்கள் பாதீக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குனைஸ் பாரூக் ஆகியோர் கடற்படையினரினால் அபகரிக்கப்பட்ட காணியை பார்வையிடுவதற்காக நேரடியாக கடற்படை முகாமுக்கு சொன்றிருந்தனர்.
எனினும் கடற்படை முகாமின் பிரதான நுழைவாயிலில் சுமார் 15 நிமிடங்கள் வரை தடுத்து நிறுத்தப்பட்டதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே சென்ற அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலை,தேவாலயம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளனர்.
மன்னார் முள்ளிக்குளத்தில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணியை பார்வையிட்டார் அமைச்சர் சுவாமிநாதன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
May 31, 2015
Rating:

No comments:
Post a Comment