வடமாகாண முதல்வரின் கோரிக்கை தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கர் ரணிலிடம் கேள்வி
யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேறக்கோரும் வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கோரிக்கை தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது அதற்கான பதிலை வழங்குகையில் அரசாங்கம், புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் ஒரே தேசியக்கொடியின்கீழ் உள்ள இலங்கை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் மகாநாயக்கர் வலியுறுத்தியுள்ளார்.
தம்மிடம் ஆசிபெறவந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அஸ்கிரிய மகாநாயக்கர், இந்தக்கேள்வியையும் வலியுறுத்தலையும் முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இந்த வருட சுதந்திர தினக்கொண்டாட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இது, அவர்கள் இலங்கையின் சுதந்திர தினத்தையும் இராணுவத்தையும் ஏற்றுக்கொண்டதை குறிப்பதாக ரணில் குறிப்பிட்டார்.
சில உறுப்பினர்கள் பாதகமான கருத்துக்களை முன்வைக்கின்றபோதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துணர்வுடன் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
எனினும் பொதுமக்களின் காணிகளை படையினர் பிடித்து வைத்துள்ளமை பிரச்சினையாகவே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
போர் முடிந்த பின்னர் படையினருக்கு குறித்த காணிகள் தொடர்ந்தும் தேவைப்படாது என்ற அடிப்படையில் அவை உரிய உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
வடமாகாண முதல்வரின் கோரிக்கை தொடர்பில் அஸ்கிரிய மகாநாயக்கர் ரணிலிடம் கேள்வி
Reviewed by Author
on
May 31, 2015
Rating:
Reviewed by Author
on
May 31, 2015
Rating:

No comments:
Post a Comment