முசலி பிரதேச செயலகத்தினால் சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்பு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு
வீ டமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் சமுக அபிவிருத்திப் பிரிவினால் இலங்கையில் நடைமுறைபடுத்தும் சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தின நிகழ்வு நேற்று நாடாவரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 9 மணிக்கு முசலி பிரதேச செயலாளர் செல்லத்துறை கேதீஸ்வரன் முசலி பிரதேசத்திற்கான சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்பு நிகழ்வினை வைபக ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இன் நிகழ்வு மே 31 ஆம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை போதை தொடர்பான எதிர்ப்பு நிகழ்வுகள் இடம்பெறும்.
முசலி பிரதேச வாழ்வின் பிரதேச உத்தியோகத்தர் பிர்தொஸ்,வங்கி முகாமையாளர் பீரிஸ் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் நதிர் ,அஸ்லிப் மற்றும் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவு திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் வாஜுத் கலந்து கொண்டனர்.
முசலி பிரதேச செயலகத்தினால் சர்வதேச புகைத்தல்-மது எதிர்ப்பு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:



No comments:
Post a Comment