அன்று கிருசாந்தி, இன்று வித்தியா..! இந்த மண்ணில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! VIDEO
புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல், பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் காணாமற்போன மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த மாணவியின் சடலம் பாழடைந்த வீடொன்றினுள் இருந்து நேற்று (14) மீட்கப்பட்டது.
புங்குடுதீவு பிரதேச பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுவந்த அந்த மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மாணவியின் சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் சடலத்தில் காயங்கள் காணப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த 30, 34 மற்றும் 40 வயதான மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
இதன்போது சந்தேகநபர்களை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, மாணவியின் கொலையைக் கண்டித்து இன்று பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் சிலவற்றின் பழைய மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தியவாறு இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, கிளிநொச்சியிலுள்ள பாடசாலைகள் சிலவற்றின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தத்தமது பாடசாலைகளுக்கு அருகிலிருந்து முற்பகல் 11 மணியளவில் மாணவர்கள் கண்டன ஊர்வலமாக சென்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கோஷங்களை எழுப்பினார்கள்
பாடசாலை மாணவிகளான தமக்கு ஏற்படுகின்ற சமூக வன்முறைகளைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் வலியுறுத்தினர்.
இதேவேளை, யாழ், பல்கலைக்கழக மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Reviewed by NEWMANNAR
on
May 16, 2015
Rating:

No comments:
Post a Comment