16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை
தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 45 வயது சிறிய தந்தைக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜா 45 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், முப்பதாயிரம் ரூபாய் தண்டத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதி வரையான காலப் பகுதியிலேயே வென்னப்புவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரின் மனைவி குழந்தை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயம் தனது மனைவியின் முன்னைய கணவருக்குப் பிறந்த 16 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்ததன் பின்னர் அவரது தாய் சிறுமியின் தங்கை மற்றும் தம்பியையும் பராமரிப்பதற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளதாகவும்,. இந்நிலையில் தாய் கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் தனது சிறிய தந்தையினால் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் சாட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் தான் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்டவரினால் தனக்குப் பிறந்த குழந்தையின் இரத்தத்தை டீ.என்.ஏ பரிசோதனை செய்யுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி கோரியதோடு அதற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரும் சம்மதம் தெரிவித்து பரிசோதனைக்கான செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட டீ.என்.ஏ. பரிசோதனையில் குழந்தை குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருடையது என நிரூபணமாகியுள்ளது.
பின்னர் குற்றம் சுமத்தப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு 45வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, தண்டம் மற்றும் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்படடது.
தண்டப்பணத்தைச் செலுத்த தவறின் ஒன்றரை வருட இலகு சிறைத்தண்டனையும், நஷ்டஈட்டுத் தொகையினைச் செலுத்த தவறின் மேலும் ஒரு வருட இலகு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment