அண்மைய செய்திகள்

recent
-

150 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை


வெளிநாடுகளில் வாழும் 150 இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் பொது அமைதி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு என்பன இணைந்து வழங்கும் இரட்டை குடியுரிமை வழங்கும் நடடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, முதல் கட்டமாக 200 பேருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டதாகவும் மேலும் 641 பேர் இரட்டை குடியுரிமை வழங்கும் பட்டியலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் இரட்டை குடியுரிமை வழங்குவதை 2011 ஆம் ஆண்டு இரத்துச் செய்திருந்தது, அவர்களின் அரசியல் நண்பர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே கடந்த அரசாங்கம் இந்த இரட்டை குடியுரிமையை வழங்கியது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரட்டை குடியுரிமைக்கான கதவுகளை திறந்துள்ளார். இது சகலருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பம் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

150 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை Reviewed by Author on June 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.