மன்னாரில் காணாமல் போனவர் வெலிக்கடை சிறையில்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
மன்னாரில் இருந்து விசாரணைக்கு என்று அழைத்துச் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல்போன பட்டியலில் இருந்து வரும் நபர் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக அறிக்கை சமர்பிக்கும்படி மன்னார் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் பள்ளிமுனை கிராமத்திலுள்ள என்னுடைய வீட்டில் இருந்த மகனை பாதுகாப்பு படையினர் விசாரணைக்கு என கடந்த 2008ம் ஆண்டு அழைத்துச் சென்றதாகவும் அதன்பின் நாங்கள் எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைக்கும்படி பல முறை வேண்டியும் பலன் கிடைக்காத நிலையில் எனது மகனும் காணாமல்போனவர்களின் பட்டியலில் ஒருவராக இருந்து வருதாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தைப் பொங்கல் விழாவன்று வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
ஐனாதிபதி கலந்து கொண்ட இவ் விழா காட்சியின் புகைப்படம் ஒன்று இணையத்தளம் ஒன்றில் வெளிவந்தபோது அப் படத்தில் எனது மகனும் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.
தனது மகன் உயிரோடு இருப்பதாக காணாமல்போன மகனின் தாய் மன்னார் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு கடந்த புதன் கிழமை (03) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவ் வழக்கில் இது விடயமாக விசாரணையை மேற்கொண்டு மன்றில் அறிக்கை அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதிபதி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.
ஆனால் இது விடயமாக பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்காததால் குறிப்பிடப்படும் நபர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கின்றாரா? வெளியிடப்பட்ட புகைப்படம் எவ்வாறு எடுக்கப்பட்டது போன்ற விடயங்கள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக வெலிக்கடை அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு அடுத்தத் தவணைக்கு மன்றில் அறிக்கை சமர்பிக்கும்படி நீதிபதி பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்தார்.
இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மன்னாரில் காணாமல் போனவர் வெலிக்கடை சிறையில்: அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
June 08, 2015
Rating:

No comments:
Post a Comment