ஜேர்மனியில் 28 ஆண்டுகளாக சிவப்பு நிறத்திலேயே இருக்கும் போக்குவரத்து விளக்கு: விந்தையான பின்னணி

ஜேர்மனியில் உள்ள ஒரு போக்குவரத்து விளக்கு 28 ஆண்டுகளாக சிவப்பு நிறத்திலேயே எரிவது ஆச்சரியம் அளித்துள்ளது.
ஜேர்மனியில் டிரீஸ்டென் நகரில் கடந்த 28 ஆண்டுகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன.
ஆனால் கடந்த 1987ல் இருந்து 28 ஆண்டுகளாக அங்குள்ள போக்குவரத்து விளக்கு ஒன்று சிவப்பு நிறத்திலேயே எரிந்துகொண்டு இருக்கிறது.
எல்பி நதியின் தெற்கு பகுதியில் நான்கு விதிகள் சந்திக்கும் இடத்தில் தான் இந்த போக்குவரத்து விளக்கு உள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்நாட்டின் போக்குவரத்து விதியின்படி சிகப்பு விளக்கு எரிந்தாலும் வலது பக்கத்தில் உள்ள விளக்கு பச்சை நிறத்தில் எரிந்தால் வலதுபக்கமாக திரும்ப அனுமதி உண்டு.
அதே நேரத்தில் இந்த பகுதியில் வலது பக்கம் மட்டுமே திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து விளக்கை பின்பற்றாமலேயே மக்கள் வலது பக்கம் திரும்பலாம் என்று போக்குவரத்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இயங்காத இந்த விளக்குக்கு வருடத்துக்கு 5,500 யூரோ செலவு செய்யப்படுகிறது.
இந்த செலவு இங்குள்ள சிவப்பு விளக்கை மாற்றுவதற்கு மட்டுமல்ல எரியாமலேயே இருக்கும் பச்சை விளக்குக்கும் சேர்த்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் 28 ஆண்டுகளாக சிவப்பு நிறத்திலேயே இருக்கும் போக்குவரத்து விளக்கு: விந்தையான பின்னணி
Reviewed by Author
on
June 16, 2015
Rating:

No comments:
Post a Comment