கால்பந்து தாத்தாவின் வலையில் ரொனால்டோ காதலி! வெளிச்சத்திற்கு வந்த பிளாட்டரின் மன்மத லீலைகள்

சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் கொடிகட்டி பறந்த செப் பிளாட்டரின் பல்வேறு மன்மத லீலைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
79 வயதான சுவிட்சர்லாந்தின் செப் பிளாட்டர், சமீபத்தில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக 5வது முறையாக தெரிவு செய்யப்பட்டார்.
இவரது காலக்கட்டத்தில் நடந்த ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்த காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் பெண்கள் விடயத்தில் ‘வீக்’ ஆக இருக்கும் செப் பிளாட்டரின் வலையில் ரொனால்டாவின் காதலியாக இருந்த இரினா ஷெய்க் சிக்கியது தான்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த பிளாட்டர், மூன்று முறை திருமணம் செய்துள்ளார். முதலில் உள்ளூர் பெண் லிலியான் பினரை திருமணம் செய்தார்.
அதன் பிறகு 1995ல் தனது மகளின் தோழியான லியானோ போகஸ்காவுடன் (போலந்து டென்னிஸ் வீராங்கனை) சில காலம் நெருக்கமாக இருந்தார். 1998ம் ஆண்டு பிபா தலைவரான பிறகு பல இளம் பெண்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் 2002ல் கிரேசியல்லா பியன்காவை (டால்பின் மீன் சாகச பயிற்சியாளர்) திருமணம் செய்தார். இந்த 3வது திருமணமும் விரைவில் கசந்தது.
இதனையடுத்து 2014ல் இருந்து தன்னைவிட 30 வயது இளையவரான சுவிஸின் லிண்டா பாரஸ், 49, என்பவருடன் சுற்றி வருகிறார்.
இந்த நிலையில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோவின் முன்னாள் காதலியும் ரஷ்ய மாடலுமான இரினா ஷெயக் உடன் நீண்ட காலம் (2002–2014) பிளாட்டர் நெருங்கி பழகியதாகவும், இதன் காரணமாகவே அடிக்கடி ரொனால்டோவுக்கு எதிரான கருத்துக்களை அவர் கூறியதாகவும் ஸ்பெயின் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது, சமீபத்தில் அயர்லாந்து கால்பந்து சங்க செயல் அதிகாரி ஜான் டிலேனியின் மனைவி எம்மாவை பிளாட்டர் குறி வைத்ததாகவும், அதன் பின்னர் அவர் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
கால்பந்து தாத்தாவின் வலையில் ரொனால்டோ காதலி! வெளிச்சத்திற்கு வந்த பிளாட்டரின் மன்மத லீலைகள்
Reviewed by Author
on
June 16, 2015
Rating:
Reviewed by Author
on
June 16, 2015
Rating:

No comments:
Post a Comment