திறந்த வெளி சிறைச்சாலையாக மாறிய மன்னார் மாவட்ட செயலகம்.
யுத்தம் முடிவுற்று மைத்திரியின் நல்லாட்சியின் கீழ் ஓரளவு திருப்தியுடன் வாழ ஆரம்பிக்கும் போது அம்மக்களுக்காக சேவை செய்யும் அரச உத்தியோகத்தர்கள் முடக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கின்றது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்ட செயலகத்தின் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு சீ.சீ.டி கமரா பொருத்தப்பட்டு சகல உத்தியோகத்தர்களும்,வெளியில் இருந்து வரும் பொதுமக்களும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றனர்.
ஏன் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. எந்த கச்சேரியிலும் இல்லாத கட்டுப்பாடு மன்னார் மாவட்ட சிங்கள அரச அதிபரினால் அமுல்படுத்தப்படுகின்றது.
ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் எல்லாம் 'பல்லு புடுங்கிய பாம்பு போல்' ஒழிந்து திரிகின்றனர்.
நேற்றிலிருந்து(16-06-2015) வெளியில் செல்லும் உத்தியோகத்தர்கள் வாசலில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கையொப்பம் இட்டு செல்ல வேண்டும் என்பது புதிய சட்டமாக அமுல்படுத்தப்படுகின்றது.
வெலிக்கடை,மகசீன் சிறைச்சாலைகளில் கூட இல்லாத நிலைமை மன்னார் மாவட்ட செயலகத்தில் நிலவுகின்றது.
நிர்வாக அலுவலகரிடம் இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டு பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடமையில் இருக்கும் பாதுகாப்பு காவலாளி உத்தியோகத்தர் பொதுமக்களுடனும் உத்தியோக்தர்களுடனும் முறையற்ற விதமாக நடந்து கொள்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
இவ் நிலைமைகளை வெளியில் சொல்ல முடியாமல் பல உத்தியோகத்தர்கள் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலைமை தொடருமாயின் மாவட்ட செயலகம் விரைவில் ஸ்தம்பிதமடையக்கூடிய வாய்ப்புள்ளது என மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திறந்த வெளி சிறைச்சாலையாக மாறிய மன்னார் மாவட்ட செயலகம்.
Reviewed by NEWMANNAR
on
June 17, 2015
Rating:
No comments:
Post a Comment