பாட்டியிடம் இருந்து ”சர்” பட்டத்தை பெற்றுக்கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு, அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் சர் "சர்" பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளார்.
இளரவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் இரண்டு முறை பணியாற்றியது உட்பட 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்த மாத இறுதியில் அவர் ராணுவத்தில் இருந்து விலக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றிய போது பல்வேறு விதமான தொண்டு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அவற்றில் 2014ம் ஆண்டு போரில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக 'இன் விக்டஸ் கேம்ஸ்' எனும் விளை யாட்டுப் போட்டியைத் தொடங்கி யது மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக லெஸோத்தோ நாட்டில் தொண்டு அமைப்பைத் தொடங்கியது ஆகியவை முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.
அதன் அடிப்படையில், ஆட்சியில் இருக்கும் பிரித்தானிய அரசர்கள் தங்கள் கீழ் பணி யாற்றும் சிறந்த சேவகர்களுக்கு தனிப்பட்ட முறையில் 'நைட் கமாண்டர் ஆஃப் ராயல் விக்டோரியர் ஆர்டர்' எனும் விருது வழங்கி கவுரவிக்கிறார்கள்.
இந்த விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்பு 'சர்' எனும் அடைமொழியை இணைத்துக் கொள்வது வழக்கமாகும்.
இந்நிலையில், இளவரசர் ஹரிக்கு "சர்" பட்டத்தை, பிரித்தானிய அரசியும், அவரது பாட்டியுமான எலிசபெத் வழங்கி சிறப்பித்துள்ளார்
பாட்டியிடம் இருந்து ”சர்” பட்டத்தை பெற்றுக்கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி
Reviewed by Author
on
June 08, 2015
Rating:

No comments:
Post a Comment