
சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து பூமியில் இருக்கும் விஞ்ஞானியுடன் வீரர் கைகுலுக்கியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஜேர்மனி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து பூமிக்கு மேலே 8,046 கி.மீற்றர் உயரத்தில் விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர்.
அதில் ஈடுபட 6 மாதங்களுக்கு ஒருமுறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அங்கு தங்கியுள்ள அமெரிக்காவின் நாசா வீரர் டெர்ரி விர்ட்ஸ் நெதர்லாந்தில் இருக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விஞ்ஞானி ஆண்ட்ரே ஸ்சியலுடன் கை குலுக்கியுள்ளார்.
‘ஜாய் ஸ்டிக்’ முறை மூலம் இவர்கள் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். அதாவது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் இருந்து டெர்ரி கைகொடுத்த சிக்னல் பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோமீற்றர் உயரத்தில் இருக்கும் விண்கலத்துக்கு சென்றது.
பின்னர் அது அங்கிருந்து அமெரிக்காவின் ஹுஸ்டனில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையம் மற்றும் அட்லாண்டிக் கடலை கடந்து நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு சென்றடைந்தது.
இந்த சிக்னல் 0.8 வினாடிகளில் விண்வெளியில் இருந்து பூமியை வந்தடைந்தது.
வீரர் டெர்ரி விண்வெளியில் இருந்து கைகுலுக்கியதை உண்மையாக உணர்ந்தேன் என விஞ்ஞானி ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment