தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது!
பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் மக்களின் நிரந்தர தீர்வு திட்டத்தினை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுடைய ஏனைய பிரச்சினைகள் சம்பந்தமான தீர்வுகளுக்கான திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றம், இராணுவ வெளியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய அபிவிருத்திகள் மற்றும் உட்கட்டுமான பணிகளுக்கான திட்டங்கள் என்பனவும் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது!
Reviewed by Author
on
July 25, 2015
Rating:
Reviewed by Author
on
July 25, 2015
Rating:








No comments:
Post a Comment