அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் சுற்றுலாத்துறையும் அதன் விருத்தியும்




இலங்கையானது இந்துசமுத்திர பரப்பில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். இதன் பரப்பு 65610km2 ஆகும். இது இயற்கையினால் சூழப்பட்ட ஓர் அழகிய தீவாகும். இதனை அடிப்படையாக கொண்டு இலங்கையின் சுற்றுலாத்துறையானது இன்றைய காலகட்டத்தில் விருத்தி பெற்ற ஒருதுறையாக காணப்படுகின்றது.

இதன் பொருட்டு சுற்றுலாத்துறையின் விருத்திக்கு சுற்றுலாபயணிகள் முக்கியம் பெற்றவர்களாக காணப்படுகின்றனர். அந்த வகையில் சீனாவில் இருந்து அதிகமாக 2014-2015 களில் வருகை தருவதாக SRILANKAN TOURISM AUTHORITY கூறுகின்றது. குறிப்பாக சீனாவில் இருந்து 54.4% வருகை தருகின்றனர். தெற்காசியாவிலிருந்து 13.4%உம் அவுஸ்திரேலியாவிலிருந்து 7.3%உம் ஐரோப்பியநாடுகளில் இருந்து 22.6% உம் வருகை தருகின்றனர். அத்துடன் இந்தியா லண்டன் ஆகியன அடுத்த இடங்களை பிடித்துள்ளன. இது தவிர மாலைதீவு(46805) அமெரிக்கா (27957) அவுஸ்திரேலியா(39497) சீனா(34951) ரஷ்சியா(27409)வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்துடன் இவ்வாறு அதிக பயணிகள் வருவதற்கு இலங்கையில் உள்ள இடங்களினை உற்று நோக்குமிடத்து பல்வேறு இயற்கையினை ஒன்றிணைத்து இடங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 1982 ஆம் ஆண்டு UNESCO இனால் world heritage sites இல் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களாக அனுராதபுரம், பொலநறுவ, கண்டி, காலி, சிங்கராஜவனம், மத்திய உயர்நிலம், தம்புள்ள பொற்கோவில், சிகிரியா போன்றன காணப்படுகின்றன. இதில் கலாச்சார முக்கோண வலயங்களாக அனுராதபுரம், பொலனறுவ, கண்டி காணப்படுகின்றன. இன்று தம்புள்ள, சிகிரியா இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர யாழ்ப்பாணம் ஓர் சிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படுகின்றது. குறிப்பாக 52 சுற்றுலா தளங்கள் இருப்பதாக SRILANKAN TOURISM AUTHORITY கூறுகின்றது. அவற்றுள் கசூரினா கடற்கரை, காரைநகர் வெளிச்சவீடு, ஜம்புகோளபட்டினம் மற்றும் சிவன்சிலை, கந்தரோடை, நிலாவரை, நல்லூர், நயினாதீவு, செல்வச்சந்நிதி, தொண்டமனாறு, நாகவிகாரை, பொதுநூலகம், கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு, கீரிமலை, காங்கேசன்துறை தசவண்ண விடுதி, சீமெந்து தொழிற்சாலை, ஜமுனா நீர்த்தாங்கி, சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை, நாவற்குழி நீரேரி, சாட்டி, புங்குடுதீவு, நெடுந்தீவு, புல்லுக்குளம், மணிக்கூட்டுகோபுரம், மணற்காடு, மண்டபக்காடு, OLR church, உப்பளம் நீரேரி, தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், போன்றனவற்றை குறிப்பிட்டு கொள்ளலாம். பொதுவாகவேயாழ்ப்பாணத்தினை நோக்கி அதிக பயணிகள் வருவதனை அவதானிக்கலாம். இதற்காக யாழ்ப்பாணம் இன்று விருத்தி பெற்றதாக அமைகின்றது.

மற்றும் மட்டக்களப்பு ( கல்லடி கடற்கரை, பாசிக்குடா, முகத்துவாரம், முகத்துவார வெளிச்சவீடு, மாமாங்கேச்ச்சரம்), அம்பாறை (திருக்கோவில், அறுகம்குடா, பொத்துவில்), காலி (காலிக்கோட்டை, coral beach) கண்டி (தலதாமாளிகை, பேராதனை பூங்கா தேயிலை தோட்டங்கள்), திருகோணமலை ( திருக்கோணேஸ்வரம், கிண்ணியா, புறாத்தீவு) , மன்னார்(தலைமன்னார், பள்ளிமுனை, முருங்கன்) போன்றவற்றினையும் அம்பாந்தோட்டை, நுவரெலியா, பதுளை, பீதுருகாலமலை, பெந்தோட்ட, பெருவல, புன்தல தேசிய பூங்கா, தம்புள்ள, எல்ல, காலி, கிக்கடுவ, கற்றன்சமவெளி, கற்குடா, கற்பிட்டி, கட்டுநாயக்க, கித்துல்கல, பின்னவல, இரத்தினபுரி, வெளிகமகுடா, வில்பத்து சரணாலயம், யாலதேசிய பூங்கா, மாத்தறை, நீர்கொழும்பு, வில்பத்து சரணாலயம், மின்னேரியா போன்றன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத்துறை விருத்தி

இன்று ஆசியாவிலே ஆச்சரியம் மிக்க ஒரு தீவாக இலங்கை மிளிர்கின்றது. இதற்கு சுற்றுலாத்துறையினை அடிப்படையாக கொண்டு பல விருத்திகளினை இலங்கை அரசாங்கம் செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தகது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதற்காக இன்று கலாச்சார முக்கோண வலயங்களினை புனரமைத்தல் பணி நடைபெறுகின்றது. அத்துடன் சூழலியல் சார்சுற்றுலாவினை விருத்தி செய்தல்(eco-tourism) போன்றன குறிப்பிடத்தக்கது. இதற்காக சிங்கராஜவனம், பேராதனைபூங்கா போன்றவற்றை புணரமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இன்று புதிதாக green tourism introduction நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் 2015ம் ஆண்டு 83 நாடுகளில் சுற்றுலா சார் கண்காட்சி நடைபெற்றது. இது உலகளாவிய ரீதியில் நடைபெற்றது. இதில் இலங்கை 4வது இடத்தினை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 162 அறைகளினை கொண்ட விடுதிகள் புதிதாக யாழ்ப்பாணம், கொழும்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன. தற்பொழுது தம்புள்ள வெள்ளவாய, கிழக்கு மாகாண பகுதிகளில் இரண்டு விடுதிகள் கட்ட அரசு தீர்மானித்துள்ளது. இன்றைய வரவு செலவு திட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு என 8billion/= ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர யால பகுதிகளில் 80 அறைகள் கொண்ட விடுதிக்காக 2.1billion/= ஒதுக்கப்பட்டள்ளது. நீர்கொழும்பு விடுதி அதாவது 28 தொகுதிகளினை இணைக்க 500million/= ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது யாழ்ப்பணத்தில் thalsavanna holiday resorts கட்டப்பட்டுள்ளது. இது சுற்றுலாத்தளமாக இன்று காணப்படுகின்றது.

இத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகள் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகளாக COLOMBO-KADDUNAYAKKA(25.8KM) SOUTHERN HIGHWAY(126KM) QUARTER CIRCLE HIGHWAY(29.1KM) , GALLE-MATHTHARAI KIRULUPPANA-KOMAGAMA(B-04) HIKKADUWA-BADEGAMA-NIKKENNA(B-153) COLOMBO-KANDY(115.85KM) BATTICALOA-TRINCO(179.6) யுத்ததிற்கு பின்னர் JAFFNA-KANDY(A9) புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மற்றும் கடுகதிசேவைஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1990 களின் பின்னர் யாழ்ப்பாணத்தினை நோக்கி 2015 JANகளில் யாழ்தேவி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது COLOMBO-KKS. வரை செல்கிறது

இவற்றினை கொண்டு பார்க்குமிடத்து இவ்வாறன விருத்திகளின் அடிப்படையில் சுற்றுலா அதிகாரசபை 2014களில் 42585million/= வருமானம் கிடைத்ததாகவும் 2006-2016 வரை 327billion/= வருமானம் கிடைக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இத்துடன் அதிக சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக 2010களில் 654476 பேர் 2011களில் 855975 பேர், 2012களில் 950000பேர், 2013களில் 1250000பேர், 2014களில் 1600000பேர், 2015களில் 2000000பேரும் 2016களில் 2.5million பேரும் வருகை தருவார்கள் என எதிர்வு கூறுகின்றது.

சுற்றுலாப்பயணிகளும் வருகையும்

MONTHS        2014           2015      INCREASE %

JANURAY      146575      156246      6.6%
FEBRUARY   141878      165541      16.7%
MARCH          133048     157051      18%
APRIL             112631
MAY                90046
JUNE               103175
JULY               133971
AUGEST         140319
SEPTEMBER  105535
OCTOBER      121576
NOVEMBER  119729
DECEMBER  178672

(SRILANKA TOURISM AUTHORITY)

மேற்கூறப்பட்டவாறு இலங்கையின் சுற்றுலாத்துறையும் அதன் விருத்தியும் சிறப்புற்று அமைகின்றமை குறிப்பிடத்தக்கது எனலாம். இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துறை விருத்தி பெற்று நிற்கின்றது. சுற்றுலாத்துறை என்றால் இலங்கை தான் பொருத்தமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

கீர்த்தி சிவாஜி
புவியியல் சிறப்புக்கலை
கிழக்கு பல்கலைக்கழகம்
2ம் வருடம்.

இலங்கையின் சுற்றுலாத்துறையும் அதன் விருத்தியும் Reviewed by NEWMANNAR on July 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.