புலிகளின் முயற்சி ரணில் ஊடாக நிறைவேறுகின்றது: சரத்
மத்திய வங்கியை குண்டுத்தாக்குதலில் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க அன்று விடுதலைப் புலிகள் முற்பட்டனர். இன்று புலம் பெயர் தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்க ஊடாக தமிழர் ஒருவரை மத்திய ஆளுநராக நியமித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க முற்பட்டுள்ளனர் என முன்னாள் உயர் நீதிமன்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.
மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவரை பிரதமராகப் ஜனாதிபதியால் நியமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
மாத்தளை நாஉல மக்கள் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புலிகளின் முயற்சி ரணில் ஊடாக நிறைவேறுகின்றது: சரத்
Reviewed by Author
on
July 26, 2015
Rating:

No comments:
Post a Comment