பாம்புடன் செல்பி எடுத்த இளைஞருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...

பாம்புடன் செல்பி எடுத்து கொள்ள ஆசைப்பட்டு பாம்பின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவருக்கு சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது.
கலிபோர்னியா, சாண்டியாகோ பகுதியைச் சேர்ந்தவர் டோட் போஸ்லர் என்பவர் பாம்பு ஒன்றை குட்டியில் இருந்து ஓராண்டு காலம் வளர்த்து வந்தார்.
தான் வளர்த்து வரும் பாம்புடன் செல்பி எடுத்து கொள்ள விரும்பிய பாஸ்லர், படம் நன்றாக இருக்கம் வேண்டும் என கருதி பாம்பிற்கு அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார்.
எனினும் பாம்பு பாஸ்லரை கடித்து விட்டது. இதனால் உயிருக்கே ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சையளித்த பின்னர் அவருக்கும் மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது வைத்தியசாலை நிர்வாகம் சிகிச்சையளித்தற்கான செலவீனத்தை குறித்த நபருக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இதன்பின்னரே அவருக்கு அதிரச்சி காத்திருந்தது.
அதாவது வைத்தியசாலை செலவு 150000 டொலராக (ரூ.20082000) இருந்தது. எனினும் மருத்துவமனையில் மொத்த தொகையையும் செலுத்தி விட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் தான் வளர்த்த பாம்பை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் எடுத்து கொண்டு விட்டுள்ளார்.
பாம்புடன் செல்பி எடுத்த இளைஞருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...
Reviewed by Author
on
July 26, 2015
Rating:
Reviewed by Author
on
July 26, 2015
Rating:

No comments:
Post a Comment