சௌபாக்கியமான எதிர்காலம் முஸ்லிம்களுக்கு பிறக்கட்டும்

நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கி செல்கின்ற எமது தேசத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களிக்கின்றது என்பதை ஈதுல் பிதுர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலத் திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில்,அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இன்றைய தினத்தில் ஈதுல் பிதுர் பண்டிகையை கொண்டாடும் இலங்கைவாழ் மற்றும் அனைத்துலக முஸ்லிம் மக்களுகக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த மாதமானது நோன்பு ஆன்மீக மலர்ச்சி மற்றும் உதவி தேவைப்பட்டோருக்கு உதவி புரியும் காலமாக இருந்தது. ஈதுல் பிதுர் பண்டிகையின் மூலம் பரிசுத்தம் புனிதத்தன்மை மற்றும் ஆன்மீக ரீதியான தூய்மை ஆகியவை மீளப்பெற்றுக் கொள்ளப்படுவதுடன் மனிதாபிமான ரீதியில் எம்மை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
உலக மதங்களின் செழிப்புமிக்க மரபுரிமையை இலங்கை அடைந்திருப்பதால் நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கிச் செல்கின்ற உமது தேசியத்தில் இஸ்லாம் மதம் எவ்வாறு பங்களின்னின்றது என்பதை ஈதுல் பித்ர் பண்டிகை எமக்கு நினைவூட்டுகின்றது.
இன்ஷா அல்லாஹ், இலங்கை வாழ் முஸ்லிம் மக்களின் மகிழ்ச்சிகரமான ஈதுல் பிதுர் பண்டிகைக்கும் பாதுகாப்புமிக்க சௌபாக்கியமான எதிர்காலத்திற்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
சௌபாக்கியமான எதிர்காலம் முஸ்லிம்களுக்கு பிறக்கட்டும்
Reviewed by Author
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment