அண்மைய செய்திகள்

recent
-

அடாவடியாக நடக்கும் பௌத்த மதகுருமாருக்கு ஆப்பு! புதிய சட்டம் அறிமுகம்...


இனவாத செயற்பாடுகளைத் தூண்டும் மற்றும் அடாவடித்தனமான செயல்களில் ஈடுபடும் பௌத்த மதகுருமாருக்கு எதிராக கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மதகுருமார் தங்களுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை கவசமாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்று மோசடிகள், இனவாதச் செயற்பாடுகள், அடாவடிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பௌத்த மதத்தின் விழுமியங்கள் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் மதகுருமாருக்கும் இதுகாலவரையும் சாதாரண சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.

எனினும் இனிவரும் காலங்களில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமாரைத் தண்டிக்க விசேட சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போதைக்கு அதற்கான வரைபு தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடாவடியாக நடக்கும் பௌத்த மதகுருமாருக்கு ஆப்பு! புதிய சட்டம் அறிமுகம்... Reviewed by Author on August 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.