அண்மைய செய்திகள்

recent
-

மனிதனின் நான்கு உணர்வுகளுக்கும் விருந்தாகும் கலர்ஸ் மொபைல்...


தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும், பெற்றுக் கொள்ளவும் மாத்திரம் கையடக்கத் தொலைபேசி ஒன்றை பாவித்த காலம் மலையேறிவிட்டது.

சமூக வாழ்க்கை, உறவுகள் மற்றும் மகிழ்ச்சியூட்டும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக ஸ்மார்ட் ஃபோன்களை உபயோகிக்கும் காலப்பகுதியில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம்.

ஆனாலும், தொழில்நுட்பம் எந்தளவு மேம்பட்டிருந்தாலும், எத்தனை பேருக்கு, தமது உண்மையான தேவையை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவுள்ளது என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

இந்த எளிமையான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, கலர்ஸ் மொபைல் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து கையடக்க தொலைபேசிகளை வடிவமைத்து வருகிறது.
எனவே, கலர்ஸ் மொபைல் உடன், மொபைல் பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை அனுபவிக்க முடியும் என்பதற்கு மேலாக, தம்மை உண்மையாக பிரதிபலிக்கும் ஒரு கையடக்க தொலைபேசியை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும்.

உதாரணமாக, Colors K15 என்பது அன்ட்ரொயிட் kitkat 4.4.2 ஐ கொண்டுள்ளதுடன், பாவனையாளர்களின் நான்கு உணர்வுகளையும் தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இது 1.3 GHz Quad Core புரொசெசர், LED Flash உடனான 13 MP பின்புற கமரா மற்றும் Auto focus கொண்டுள்ளதுடன், 2 MP முன்புற கமரா, 5 அங்குல HD IPS தொடு திரை டிஸ்பிளே மற்றும் பாவனையாளர்களின் வாழ்க்கைத்தரத்துக்கு பொருத்தமான மேலும் பல உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது.

கலர்ஸ் மொபைலின் பிரபல்யமான X18 என்பது, பெருமளவான இலங்கையர்களை கவர்ந்துள்ளதுடன், செலுத்தும் பணத்துக்கு பெறுமதியை சேர்க்கும் வகையில் பல உள்ளம்சங்களையும் கொண்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் மற்றுமொரு கலர்ஸ் மொபைல் தெரிவாக Zoom தெரிவுகள் காணப்படுகின்றன. இவை 3G செயற்படுத்தப்பட்டதுடன், இரட்டை சிம் மற்றும் Android kitkat 4.4.2 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அத்துடன், X25 என்பது இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு பிரபல்யம் பெற்றுள்ளது.

உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் ஒன்றை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சகாயமானதாக அமைந்துள்ளதுடன், இந்த தெரிவுகளில் X35 விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பாவனையாளர் ஒருவருக்கு FM Radio, MP3, MP4 பிளேயர் மற்றும் கமரா போன்ற சகல அம்சங்களையும் சகாயமான விலையில் கொண்டிருக்க வேண்டுமாயின், கலர்ஸ் மொபைல் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான தெரிவாக அமைந்திருக்கும். குறிப்பாக F007, F012 மற்றும் Z106 டச் போன்றன அடங்குகின்றன.

தற்போது காணப்படும் தெரிவுகளுக்கு மேலதிகமாக இலங்கையில் மேலும் பல கலர்ஸ் மொபைல் தெரிவுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதன் மூலம் இலங்கை பாவனையாளர்கள் மத்தியில் முற்றிலும் புதுவித அனுபவம் சேர்க்கப்படவுள்ளது.

சகல கலர்ஸ் மொபைல் தொலைபேசிகளும் ஒரு வருட பரிபூரண உத்தரவாதத்தைக் கொண்டுள்ளன. பற்றரி மற்றும் சார்ஜர்களுக்கு ஆறு மாத கால உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இலங்கையின் முன்னணி இலத்திரனியல் பொருட்கள் உற்பத்தியாளரான ஒரேன்ஜ் இலெக்ரிக்ஸ் இந்த உத்தரவாதத்தை வழங்குவதுடன், இலங்கையில் கலர்ஸ் மொபைல்களுக்கான ஏக விநியோகஸ்த்தராகவும் திகழ்கிறது.

நாடு முழுவதும் பரந்து காணப்படும் ஒரேன்ஸ் இலெக்ரிக்ஸ் விநியோகஸ்த்தர் வலையமைப்பிலிருந்து கலர்ஸ் மொபைல் தெரிவுகளை கொள்வனவு செய்து கொள்ளலாம். டெலிடோக் பிரைவட் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாண்மையைப் பெற்ற வர்த்தக நாமமாக கலர்ஸ் மொபைல் திகழ்கிறது. ஹொங் கொங் நகரை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது.

நேபாளம் மற்றும் ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் பரந்தளவில் சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது.  தரம், சகாயமான விலை மற்றும் விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவை ஆகியவற்றின் மூலமாக, கலர்ஸ் மொபைல் சகல சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு பிரத்தியேக நிலையை சந்தையில் கொண்டுள்ளது.

கலர்ஸ் மொபைல் பற்றி மேலதிக விபரங்களை www.colorsmobile.com (link is external) எனும் இணையத்தளத்தில் அல்லது www.facebook.com/COLORSSriLanka (link is external) எனும் பக்கத்தில் பார்வையிடலாம்.

மனிதனின் நான்கு உணர்வுகளுக்கும் விருந்தாகும் கலர்ஸ் மொபைல்... Reviewed by Author on September 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.