கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்...
இன்று (18) சற்று நேரத்திற்கு முன்னர் (10.30 மணி) பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச எழுத்தறிவு தினத்தையிட்டு கொழும்பில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி இன்று (18) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச புத்தக விற்பனையாளர்கள், பதிப்பகத்தினர் கலந்துகொள்ளவுள்ள இக்கண்காட்சி இன்று (18) ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை இது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள், இன்றைய தினம் தமிழ் மற்றும் சிங்கள எழுத்தாளர்கள் பங்குபற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் தமிழ் சிங்கள கவிஞர்கள் கலந்துகொள்ளும் கவிதா நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
மேலும் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு தமிழ் சிங்கள இலக்கிய உறவுகள் என்னும் தொனிப்பொருளில் சிங்கள, தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய இரு மொழி இலக்கிய வளர்ச்சி பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்...
Reviewed by Author
on
September 18, 2015
Rating:
Reviewed by Author
on
September 18, 2015
Rating:


No comments:
Post a Comment