எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து...
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
கடந்த மாதம் இலங்கையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இலங்கையில் பிரதான எதிர்க்கட்சியாக 32 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவு செய்யப்பட்டு அதன் தலைவராக இலங்கை தமிழரான இரா. சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்திகேட்டு, தமிழக எதிர்க்கட்சித் தலைவரான தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், இரா. சம்பந்தன் இலங்கையின் ஒரு சிறந்த எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்பட்டு போரினால் பாதிக்கப்பட்டு மறு வாழ்வுக்காக ஏங்கி கொண்டிருக்கும், இலங்கை தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாகவும், அவருக்கு தன் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து...
Reviewed by Author
on
September 06, 2015
Rating:

No comments:
Post a Comment