நல்லாட்சி அரசு உண்மையெனில் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்
நல்லாட்சி அரசு உண்மையெனில், இனநல்லிணக்கப் பேச்சு உறுதியானது எனில், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாகவே விடுதலை செய்யப்படவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒடடுமொத்தமாகவே உழைத்தனர். அதன் பலனாக தமது உறவுகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என அவர்கள் நம்பினர். ஆனால் இன்று புதிய அரசு அரியணையில் ஏறிய பின் அவர்கள் தங்கள் பழைய மேலாதிக்க சிந்தனையை உறுதிப்படுத்தும் முகமாக செயற்பட்டு வருவது கவலைக்குரியதாகும்.
ஐ.நா மன்றத்திற்கும் சர்வதேசத்திற்கும் தாம் ஒரு நியாயாதிக்கவாதிகளாக காட்டி நிற்கும் புதிய அரசு 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் அனைவரையும் பாகுபாடு இன்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் சித்திரவதையால் கட்டாய வாக்குமூலங்கள் பெறப்பட்டபின் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் வாடுகின்றனர். பலர் வழக்குகளை எதிர்நோக்க பணவசதி இன்றி அல்லல்பட்டு வருகின்றனர். இன்னும் ஒரு தொகையினர் வழக்குகள் தாக்கல் செய்ய ஆதாரங்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலரது குழந்தைகள், குடும்பங்கள் பராமரிக்க ஆட்களின்றி அனாதைகளாக விடப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக பெருந்தொகையான அரசியல் கைதிகள் பூசா வதைமுகாம், கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, போகம்பரை, அனுராதபுரம் போன்ற மேலும் பல சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
எனவே நல்லாட்சி அரசு உண்மை எனில் இன நல்லிணக்கம் என்னும் பேச்சு உறுதியானது எனில் ஜனாதிபதியால் அனை-த்து அரசியல் கைதிகளையும் உடன் விடு-விக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்-டும் என்றார்.
நல்லாட்சி அரசு உண்மையெனில் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன்
Reviewed by NEWMANNAR
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment