”உலகளவில் மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்”: சுவிஸ் தீர்மானத்தை ஏற்றது ஐ.நா சபை...
சர்வதேச நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கு சுவிட்சர்லாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சர்வதேச நாடுகளில் மரண தண்டனை விதிப்பதை தடை செய்வது தொடர்பாக சுவிஸில் உள்ள ஜேனிவா நகரில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த ஆலோசனை கூட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மரண தண்டனைக்கு எதிராக சுவிஸின் வெளியுறவு அமைச்சகம் தீர்மானம் கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 26 நாடுகள் வாக்களித்துள்ள நிலையில், 13 நாடுகள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன.
மேலும், 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன. எதிர்வரும் 2025ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் மரண தண்டனையை தடை செய்ய வேண்டும் என்பதே சுவிஸ் முன்மொழிந்துள்ள தீர்மானத்தின் முக்கிய நோக்கமாகும்.
இது தொடர்பாக பேசிய சுவிஸின் வெளியுறவு துறை அமைச்சரான Didier Burkhalter, மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.
ஒவ்வொரு நாடும் மனித உரிமைகளை காப்பதில் அதிக அக்கறை செலுத்துவதுடன், மரண தண்டனையை விதிப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அவர் உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒப்புதல் அளித்துள்ள இந்த தீர்மானம் தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
”உலகளவில் மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்”: சுவிஸ் தீர்மானத்தை ஏற்றது ஐ.நா சபை...
Reviewed by Author
on
October 02, 2015
Rating:
Reviewed by Author
on
October 02, 2015
Rating:


No comments:
Post a Comment