மன்னார் கிறீன் பீல்ட் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிறிக்கெற் சுற்றுப்போட்டி-18-10-2015
மன்னார் கிறீன் பீல்ட் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிறிக்கெற் சுற்றுப்போட்டி-18-10-2015

மன்னார் மாவட்டத்தின் புகழ் பூத்த விளையாட்டுக்கழகங்களில் ஒன்றான கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் நடாத்துகின்ற ஆறு பேர் கொண்ட அணியும் ஐந்து ஓவர் கிறிக்கெற் சுற்றுப்போட்டியானது இம்முறையும் மன்னார் மாவட்டத்தின் பொது விளையாட்டரங்கில் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது.
இச்சுற்றுப்போட்டியில் 8 கழகங்கள் பங்கு பற்றி விளையாடின இக்கழகங்களில் இறுதிப்போட்டியில் றிச்செரி அணியும் வுளு ஸபாரி அணியும் மோதின முதலில் துடுப்பெடுத்தாடிய வுளு ஸபாரி அணியானது ஐந்து ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருபத்தியொன்பது ஓட்டங்கள் மட்டுமே பெற்றுக்கொண்டது அவ்வணியின் துடுப்பாட்டக்காரனான பவின்குமார் தனியாக 26 ஓட்டங்களை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார்
.
இறுதியாட்டத்தில் ஆட்டநாயகன் விருதினை டிறோன்; அவர்களும் தொடர் ஆட்ட நாயகன் விருதினை வை.அனோஐன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள் வெற்றி பெற்ற கழகங்களுக்கு 1ம் இடம் 5000 ருபாவும் கேடையமும் 2ம் இடம்; கேடையமும் சீருடையும் இச்சுற்றுப்போட்டியல் வெற்றி பெற்ற வீரர்களுக்கான நினைவுச்சின்னங்களை இவ்விளையாட்டினை நடாத்திய கிறீன் பீல்ட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஆர்-ஐ-ஜேக்குமார் செயலாளர் எம்-றெனிங்ஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்….
மன்னார் கிறீன் பீல்ட் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிறிக்கெற் சுற்றுப்போட்டி-18-10-2015
Reviewed by Author
on
October 19, 2015
Rating:

No comments:
Post a Comment