அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து அதி வேகமாக நானாட்டான் நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் இருந்து வீதிக்கு தூக்கி வீசப்பட்ட இளைஞன்-பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி.



மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து நானாட்டானுக்கு பயணிகளுடன் புறப்பட்ட பேரூந்து அதி வேகமாக சென்று கொண்டிருந்த போது தள்ளாடி சந்தியில் வைத்து திடீர் என வேகத்தை கட்டுப்படுத்திய போது பேரூந்தில் இருந்த இளைஞன் ஒருவர் வீதியில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் சனிக்கிழமை(31) மலை 4.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று சனிக்கிழமை(31) மாலை 4.10 மணியளவில் நானாட்டான் நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட பேரூந்து அதி வேகமாக சென்ற கொண்டிருந்த போது தள்ளாடி சந்தியில் வைத்து திடீர் என பேரூந்தின் வேகத்தை சாரதி கட்டுப்படுத்தியுள்ளார்.

இதன் போது பேரூந்தினுள் இருந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் பேரூந்தில் இருந்த (ஜெனி-வயது-21) என்ற இளைஞன் பேரூந்தில் இருந்து வீதிக்கு தூக்கி வீசப்பட்டார்.

இதன் போது குறித்த இளைஞன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையின் பின் நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.

நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் குறித்த இளைஞனின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக சோதனைகளை மேற்கொண்ட வைத்தியர்கள் குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

எனினும் பல மணி நேரமாகியும் குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்வதற்கு உரிய நேரத்தில் அம்புலான்ஸ் வண்டி வைத்தியசாலையில் இருக்க வில்லை.

பல மணி நேரத்தின் பின் சனிக்கிழமை(31) இரவு 10.26 மணியளவில் அம்புலான்ஸ் வண்டி வந்த நிலையில் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 5 அம்புலான்ஸ் வண்டிகள் காணப்பட்டது.அதில் ஒன்று விபத்தின் காரணமாக கடுமையாக சேதமடைந்து பவனைக்கு உற்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இரண்டு அம்புலான்ஸ் வண்டிகள் திருத்த வேளை காரணமாக உள்ளது. ஏனைய இரண்டு அம்புலான்ஸ் வண்டிகளை மாத்திரமே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் கடமைக்கு உயர் அதிகாரிகள் சிலர் தடையாக செயற்பட்டு வருகின்றமையினால் வைத்தியசாலையில் உள்ள அம்புலான்ஸ் வண்டி பற்றாக்குறை உற்பட பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அம்புலான்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இருந்து அதி வேகமாக நானாட்டான் நோக்கி சென்ற தனியார் பேரூந்தில் இருந்து வீதிக்கு தூக்கி வீசப்பட்ட இளைஞன்-பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by NEWMANNAR on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.