மன்னாரில் சிங்கள மொழி பயிற்சி பெற்று வரும் மாணவர்களை முதலமைச்சர் சந்திப்பு.-Photos
மன்னாரிற்கு விஜயத்தை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை(3) வருகை தந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆங்கில பயிற்சி நிலையத்தில் இடம் பெற்று வரும் சிஙகள பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வரும் மாணவர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
குறித்த பயிற்சி நிலையத்தில் பாடசாலை கல்விறை நிறைவு செய்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மொழி ஆற்றளை மேம்படுத்தும் வகையில் சிங்கள மொழி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை மன்னாரில் இடம் பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர் குறித்த பயிற்சி நிலையத்திற்குச் சென்று பயிற்சி பெற்று வரும் மாணவர்களை சந்தித்து உரையாடினார்.
மன்னாரில் சிங்கள மொழி பயிற்சி பெற்று வரும் மாணவர்களை முதலமைச்சர் சந்திப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
October 04, 2015
Rating:
No comments:
Post a Comment