மதுபானம், சிகரெட்டின் விலை அதிகரிப்பு
நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
5 வீதத்திற்கும் குறைவான அல்கஹாலைக் கொண்டுள்ள பியர் ஒரு லீற்றருக்கான விலை 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கும் அதிகமான அல்கஹாலைக் கொண்டுள்ள பியர் ஒரு லீற்றருக்கான விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானம் ஒரு லீற்றர் 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்மதி செய்யப்படுவதற்காக உள்ளூரில் தயாரிக்கப்படும் மதுபானம் ஒரு லீற்றர் 160 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிகரட் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மதுபானம், சிகரெட்டின் விலை அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 04, 2015
Rating:

No comments:
Post a Comment