ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக 2 ஆவது இன்னிங்சை தொடருகின்றேன்: சச்சின்
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
வயிற்றோட்ட நோய்கள் காரணமாக நாளொன்றுக்கு 1600 பிள்ளைகள் உயிரிழக்கின்றனர். இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இவ்வாறு ஆட்கொல்லி நோய்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும் சிறுவர்களை ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது எமது பொறுப்பு என்பதோடு இந்நோய்களை இல்லாதொழிக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். இதுவரை காலமும் இந்திய கிரிக்கெட் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த நான் இன்று முதல் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆட்கொல்லி நோய்களுக்கு எதிராக என இன்னிங்சை தொடர உள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
Pics By : S. Surenthiran
தெற்காசியாவில் சுகாதாரம் மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்தும் யுனிசெப் நிறுவனத்தின் திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக செயற்படும் சச்சின் டெண்டுல்கர், கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கைக்கு வந்துள்ளேன். முன்னர் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக அதாவது நாட்டின் கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்தேன். ஆனால் தற்போது வித்தியான போட்டியில் விளையாட வந்துள்ளேன். அது தான் தொற்று நோய்களுக்கு எதிரான போட்டி. நான் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து தொற்று நோய்களுக்கு எதிராக துடுப்பெடுத்தாட போகின்றேன்.
தொற்று நோய்களிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு அனைவரும் சவர்க்காரம் இட்டு கை கழுவ வேண்டியது அவசியமாகும். விருத்தி செய்யப்பட்ட மலசல கூட வசதிகளை கொண்டவர்களின் விகிதாரசாரத்தைப் பொறுத்தவரையில் தெற்காசியா கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளது.
1990 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக காணப்பட்ட போதும் தற்போது 40 சதவீதமாக இது காணப்படுகின்றது.
தெற்காசியாவில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 62 சதவீதமான பாடசாலைகளிலேயே மலசலகூட வசதி காணப்படுகின்றது.
மேலும் மலசல கூடத்தை பாவிக்காமல் பொது இடங்களில் மலம் கழிப்பவர்களின் எண்ணிக்கை 64 சதவீதம் என்றவிற்கு அதிகமாக உள்ளது.
தெற்காசியாவில் மாத்திரம் 610 மில்லியன் மக்களுக்கு மலசலகூட வசதிகள் இல்லை. மேலும் மலசலகூட வசதி நகர்புறங்களிலும் கிராம புறங்களிலும் வேறுப்படுகின்றது.
எனவே மலசலகூட வசதிகள் இல்லாமையானது ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கையையும் பாதிக்கின்றது. மேலும் பெண் பிள்ளைகளின் வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கின்றது.
மலசலகூடம் சென்று வந்த பின்னர் சவர்க்காரம் இட்டு கை கழுவுதல், விளையாடிய பின்னர் கைகழுவுதல் மற்றும் வேலைகளை செய்த பின்னர் கை கழுவுதல் என சுகாதாரமாக இருக்க வேண்டும்.
வீடுகளில் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் சிறுவர்கள் இருப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதோடு பாடசாலை மட்டத்திலும் இந் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றார்.
முத்தையா முரளிதரன்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தை முரளிதரன்,
நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணமானவர்கள் பொதுமக்கள் ஆவர். இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படுவது எமது பொறுப்பாகும். குறிப்பாக தொற்று நோய்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
இலங்கையில் 17 சதவீதமான பாடசாலைகளிலும் 14 வீதமான வீடுகளில் மலசலகூட வசதிகள் இல்லை. குறிப்பாக மலையகத்திலும் நாட்டின் ஏனைய பகுதியில் வறுமையாக வாழ்பவர்களுக்கு மலசலகூட வசதிகள் இருப்பதில்லை.
சிறுவர்களை தொற்று நோய்களிருந்து பாதுகாப்பதற்கு முதலில் பின்தங்கிய பகுதிகளில் மலசலகூட வசதி இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு அவ் வசதியை பெற்று கொடுப்பதோடு அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க வேண்டும்.
இது சகலரின் பொறுப்பாகும். மேலும் எமது சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு, மொழி தெரியாமை, போதிய அறிவு இன்மை என்பன இவ்வாறு தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகும்.

Reviewed by Author
on
October 12, 2015
Rating:

No comments:
Post a Comment