அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கிறார் வடக்கு முதல்வர் விக்கி...


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று இன்­றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.


இச் சந்­திப்பில் வட­மா­காண அமைச்­சர்க­ளான ப.சத்­தி­ய­லிங்கம், டெனிஸ்­வரன், பொ.ஐங்­க­ர­ நேசன், குரு­கு­ல­ராஜா ஆகி­யோரும் பங்­கேற்­க­வுள்­ளனர். குறித்த சந்­திப்­பின்­போது வட­மா­காண அபி­வி­ருத்தி மற்றும் சம­கால அர­சியல் நிலை­மைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் நாடா­ள­விய சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வா­தச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­காலச் சட்டம் ஆகி­ய­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் விடு­தலை செய்யும் விடயம் தொடர்பில் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஷ்­வரன் முழு­மை­யாக தலை­யீடு செய்ய வேண்­டு­மென வட­கி­ழக்கில் வாழும் தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள் கோரி­யுள்­ளனர்.

அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்­வேறு வாக்­கு­று­தி­க­ளுடன் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்னர் கடந்த மாதம் 12ஆம் திகதி எமது உற­வுகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு ஜனா­தி­பதி வழங்­கிய வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி அப்­போ­ராட்­டத்தை தற்­கா­லி­க­மாக கைவிட்­டி­ருந்­தனர்.

எனினும் ஜனா­தி­ப­தியின் வாக்­கு­று­திக்கு அமை­வாக கடந்த ஏழாம் திகதி வரையில் எவரும் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­காத நிலையில் மீண்டும் நாடா­ளா­விய ரீதியில் உள்ள சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த எமது உற­வுகள் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

தற்­போது அண்­மைய காலத்தில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கே பிணை வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள், விசா­ர­ணை­க­ளின்றி உள்­ள­வர்கள், தண்­ட­னை­ய­ளிக்­கப்­பட்­ட­வர்கள், மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­ட­வர்கள் எனப் பலர் காணப்­ப­டு­கின்­றனர். அவர்­களின் விடு­தலை தொடர்­பாக எந்­த­வி­த­மான உத்­த­ர­வா­தங்­களும் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஒவ்­வொரு தட­வையும் எமது உற­வுகள் உண்­ணா­வி­ர­த­மி­ருப்­பதும் வாக்­கு­று­திகள் வழங்­கப்படுவதும் சாத­ர­ண­மாக நடை­பெறும் விடயம் போன்­றா­கி­விட்­டது. ஆகவே வடக்கு மக்களின் ஆணைபெற்றவராகவிருக்கும் தாங்கள் (வடமாகாண முதலமைச்சர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதுடன் இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வொன்றை பெறுவது தொடர்பாக அவரிடத்தில் வலியுறுத்தலைச் செய்யவேண்டுமெனக் கோரியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கிறார் வடக்கு முதல்வர் விக்கி... Reviewed by Author on November 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.