யாழில் கடும் மழை பாதிக்கப்பட் கிராமத்து மக்களை,,,,விஐயகலா மகேஸ்வரன்,,,,
யாழ்ப்பாணத்தில் பொம்மை வெளியில் 1ம் குறுக்குத் தெருவில் மழையால் பாதிக்கப்பட் கிராமத்து மக்களை சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் ஒவ்வொரு வீடாகப்பார்வையிட்டு மருத்துவ வசதிகளையும் நிவாரனங்களையும் கொடுத்ததுடன் உரிய அரச அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு மேலதிக உதவிகளை ஏற்படுத்தி கொடுத்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட வடபகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உலர் உணவு பொருட்கள் உட்பட நிவாரணங்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.யாழில் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பு:
யாழ் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் திங்கள் கிழமை மதியம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த 14 ஆயிரத்து 334 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 270 பேர் பாதிப்பினை எதிர்நோக்கி உள்ளனர். இதில் 2ஆயிரத்து 57 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 486 பேர் இடம்பெயர்ந்து 42 நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மழை காரணமாக 15 பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 54 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.ஆயிரத்து 195 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
பிரதேச செயலக ரீதியாக பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 320 குடும்பங்களை சேர்ந்த 1183 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 168 குடும்பங்களை சேர்ந்த 657 பேர் இடம்பெயர்ந்து 4 நிலையங்களில் தங்கியுள்ளனர். 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 5 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 1196 குடும்பங்களை சேர்ந்த 4337 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 115 குடும்பங்களை சேர்ந்த 449 பேர் இடம்பெயர்ந்து 4 நிலையங்களில் தங்கியுள்ளனர். 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 25 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2252 குடும்பங்களை சேர்ந்த 8254 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 375 குடும்பங்களை சேர்ந்த 1203 பேர் இடம்பெயர்ந்து 6 நிலையங்களில் தங்கியுள்ளனர். 11 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 977 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 333 குடும்பங்களை சேர்ந்த 1169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயர வில்லை. இருந்தாலும் 10 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ,100 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 891குடும்பங்களை சேர்ந்த 3275 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 87 குடும்பங்களை சேர்ந்த 313 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர்.இப் பிரதேச செயலக பிரிவில் வீடுகள் சேதமடையவில்லை.
கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 320 703 குடும்பங்களை சேர்ந்த 2714 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 57குடும்பங்களை சேர்ந்த 204 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர். 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 9 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2141 குடும்பங்களை சேர்ந்த 8226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 97 குடும்பங்களை சேர்ந்த 381 பேர் இடம்பெயர்ந்து 1 நிலையத்தில் தங்கியுள்ளனர். ஒரு வீடு மாத்திரமே பகுதிகளவில் சேதமடைந்து.
வேலணை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 689 குடும்பங்களை சேர்ந்த 2660 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 174 குடும்பங்களை சேர்ந்த 738 பேர் இடம்பெயர்ந்து 3 நிலையங்களில் தங்கியுள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் எவையும் சேதமடையவில்லை.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 667 குடும்பங்களை சேர்ந்த 2425 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 426 குடும்பங்களை சேர்ந்த 1526 பேர் இடம்பெயர்ந்து 6நிலையங்களில் தங்கியுள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் வீடுகள் எவையும் சேதமடையவில்லை.
உடுவில் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 2275 குடும்பங்களை சேர்ந்த 7705 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 551 குடும்பங்களை சேர்ந்த 1998 பேர் இடம்பெயர்ந்து 11 நிலையங்களில் தங்கியுள்ளனர். 14 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 231 குடும்பங்களை சேர்ந்த 830 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் இருந்து எவரும் இடம்பெயராத போதிலும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 419 குடும்பங்களை சேர்ந்த 1400 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் அதில் 07 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் இடம்பெயர்ந்து 1 நிலையத்தில் தங்கியுள்ளனர். 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் , 28 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 790 குடும்பங்களை சேர்ந்த 3371 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப் பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை. ஒரு வீடு முற்றாகவும் ஒரு வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
மருந்தங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 708குடும்பங்களை சேர்ந்த 2414 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை வீடுகளும் பாதிப்படையவில்லை.
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 719 குடும்பங்களை சேர்ந்த 2307 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்பிரதேச செயலக பிரிவில் எவரும் இடம்பெயரவில்லை வீடுகளும் பாதிப்படையவில்லை.
யாழில் கடும் மழை பாதிக்கப்பட் கிராமத்து மக்களை,,,,விஐயகலா மகேஸ்வரன்,,,,
Reviewed by Author
on
November 17, 2015
Rating:
Reviewed by Author
on
November 17, 2015
Rating:







No comments:
Post a Comment