வரவு செலவு திட்டத்தில் சக்கரை நோயாளிகளுக்கு ஊசி!
2016ம் ஆண்டு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவு திட்டத்pல் சக்கரை நோயாளிகளுக்கு ஊசி ஒன்று வழங்கப்படும் என்று பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டில் ஆரோக்கியமான பொருளாதார நிலைமை காணப்பட்டதாகவும் அதனால் சக்கரை அல்லது நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருக்கும் வரவு செலவு திட்டமானது பொய்யான அறிக்கைகளை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விவசாயிகளின் நெல் கொள்வனவிற்கான நெல் கிலோ ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட விலையாக ரூபாய் 50 தருவதாகவும் தேயிலை உற்பத்தியாளர்களின் பச்சை நிற தேயிலைக்கான கிலோ ஒன்றின் நிர்ணய விலை ரூபாய் 80 என்றும் இறப்பர் உற்பத்தியாளர்களுக்கான நிர்ணய விலை ரூபாய் 350 தருவதாக கூறிய தற்போதைய அரசாங்கம் அவற்றை பெற்றுக்கொடுக்காது மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவு திட்டத்தில் சக்கரை நோயாளிகளுக்கு ஊசி!
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:


No comments:
Post a Comment