நியாயவாதி என்ற அடிப்படையில் முதல்வரையே நம்பிக்கையிருக்கின்றோம்! கைதிகளின் உறவினர்கள்
நியாயவாதி என்ற அடிப்படையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரையே நம்பியிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் அரசியல்வாதிகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எதிர்வரும் 13ம் திகதி முதலமைச்சர் விக்னேஸ்வரன்ää ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஏனைய தரப்பினர் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என உறவினர்கள் கடும் வினத்தையும்ää கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக சிறைகளில் வாடிவரும் மகன்ää கணவன்ää சகோதரன்ää மருமகன்ää பேரன் விடுதலைப் பெற்றுக் கொள்வார் என்ற கனவு மெய்ப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நியாயவாதி என்ற அடிப்படையில் முதல்வரையே நம்பிக்கையிருக்கின்றோம்! கைதிகளின் உறவினர்கள்
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2015
Rating:


No comments:
Post a Comment