கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக முதலைகள்...
இந்தோனேஷிய சிறைச்சாலையொன்றிலுள்ள மரண தண்டனை கைதிகளுக்கு காவல் இருப்பதற்காக கொடிய முதலைகளை சேவையில் ஈடுபடுத்தபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனைக்குள்ளான கைதிகள் பலர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிவிட்டு தப்பிச் செல்வதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தோனேஷியாவின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவரான புதி வசேக்கோ இதுதொடர்பாக கூறுகையில், இந்தோனேஷியாவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையொன்றில் இம்முதலைகள் காவலுக்கு விடப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்துக்கு இந்தோனேஷிய நீதியமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக முதலைகள்...
Reviewed by Author
on
November 12, 2015
Rating:
Reviewed by Author
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment