மஹிந்த உள்ளிட்டோரிடமே தமிழ் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளது: வட மாகாண அமைச்சர்கள் -
மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கைகளிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளதாக வட மாகாண சபை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
மெகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது தமக்கு அதனை உணர்ந்துக் கொள்ள முடிந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளை கண்டு அச்சம் கொண்டுள்ளமையை புரிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளதெனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என வட மாகாண சபை அமைச்சர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
வட மாகாண அமைச்சர்களான பா.சத்தியலிங்கம், ரி.குருகுலதாசான், பொ.ஐங்கரநேசன் மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் இன்று மாலை மெகஸின் சிறைச்சாலைக்கு வருகைத் தந்திருந்தனர்.
மஹிந்த உள்ளிட்டோரிடமே தமிழ் கைதிகளின் விடுதலை தங்கியுள்ளது: வட மாகாண அமைச்சர்கள் -
Reviewed by Author
on
November 12, 2015
Rating:
Reviewed by Author
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment