அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொதுவைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உடைகள் சுகாதாரமற்ற நிலையில்: நடவடிக்கை எடுக்குமா? நிர்வாகம்-Photos


மன்னார் சுகாதார பரிசோதகர்களின் பொறுப்பற்ற செயலால் சத்திரசிகிச்சை உடைகள் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் பல சுகாதார சீர்கேடுகளை கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்கும் சுகாதார பரிசோதகர்கள் மன்னார் பொதுவைத்தியசாலையின் சத்திரசிகிச்கைக்கு பயன்படுத்தப்படும் உடைகள் சுகாதாரமற்றவகையில் சலவை செய்யப்படுவது தெரியாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மன்னார் பொதுவைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளி மற்றும் சத்திர சிகிச்சைக்கு உதவி புரியும் மருத்துவ உதவியாளர்கள் உட்பட வைத்தியர்கள் அணியும் உடைகள் சுகாதாரமற்றவகையில் சலவை செய்யும் முறையினை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டுமன்றி துணிகளை உலரவைக்கும் இடங்களும் துப்பரவு அற்று காணப்படுவது இங்கு காணக்கூடியதாக உள்ளது.

மன்னார் பொதுவைத்தியசாலையில் பல கட்டுப்பாடுகள் காணப்படுகிறது. குறிப்பாக அண்மையில் நிர்மானிக்கப்பட்ட புதிய மாபிள் பதித்த வாட்டுகளுக்குள் செல்வதாயின் பாதணிகளை களற்றிவிட்டே செல்லவேண்டும்.

அதனை பலர் எதிர்த்து வந்தனர் குறிப்பாக வைத்தியசாலையில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என பாதணிகளை கழற்றி செல்ல மக்கள் விரும்புவதில்லை ஆனால் அவ்வாறு பாதணிகளை கழற்றாவிட்டால் வைத்தியசாலை நிர்வாகம் நோயாளியை பார்வையிட வரும் மக்களை அனுமதிப்பதில்லை அவ்வாறு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தின் நடவடிக்கைகள் கேலிகூத்தாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக மன்னாரில் பெய்துவந்த அடைமழை காரணமாக மன்னாரின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்கை பிரிவில் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உடைகள் மன்னாரில் சலவை செய்யும் தொழிலாளிகளிடம் சுகாதாரமாக சலவை செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விடயம் இப்படியிருக்க குறித்த வைத்திய சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உடைகள் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள அசுத்த நீரில் சலவை செய்யப்படுவது கண்டு பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் ஜீவபுரம் பகுதியில் அமைந்துள்ள துணிகள் சலவை செய்யும் நிலையத்தில் குறித்த சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உடைகள் சுகாதாரமற்றவகையில்; சலவை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

எனினும் இதற்குரிய முழு பொறுப்பினையும் மன்னார் பொதுவைத்தியசாலை நிர்வாகம் மற்றும் மன்னார் சுகாரதர பணிமணையே ஏற்கவேண்டும். ஏன் எனில் மன்னாரில் சுகாதார பரிசோதகர்கள் பல்வேறு வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களை குறிவைத்து பரிசோதனை செய்து சட்டநடவடிக்கை எடுத்துவரும் நிலையில் குறித்த சலவை செய்யும் நிலையத்திற்கு குறிவைக்காதது ஏன்?

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில் சலவை செய்யும் நிலையத்தை கண்கானிக்காததன் காரணம் என்ன?

குறிப்பாக வெள்ளம் ஏற்படும் காலத்தை பார்க்கிலும் சாதாரண மழைவந்தாலே குறித்த சலவை செய்யும் நிலையத்தில் நீர்தேங்குவது வழமை அவ்வாறான சூழ்நிலையில் அங்கு குறித்த குட்டைகளில் தேங்கிகிடக்கும் அசுத்த நீரிலேயே துணிகள் கழுவுவது வழமையாகியுள்ளமை தெரியவருகிறது.


அது மட்டுமன்றி குறித்த சலவை செய்யும் நிலையத்திற்கு நேர்எதிரே குளம் ஒன்று உள்ளது. இக் குளத்தில் நீர் வற்றி, குறைந்த அளவில் நீர் காணப்படும் போது குறித்த சலவை தொழிலாளிகள் அந்த நீரிலேயே துணிகளை கழுவி வந்துள்ளனர் என தெரியவருகிறது.

இது இவ்வாறு இருக்க வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தும் உடைகளுக்கே இந்த நிலமை என்றால் ஏனையவர்களின் உடைகள் எவ்வாறு சலவை செய்யப்படுகிறது என்பது கேள்வி குறியாகியுள்ளது.

இதற்கு சம்பந்தபட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்குமா?














மன்னார் பொதுவைத்தியசாலையின் சத்திரசிகிச்சை உடைகள் சுகாதாரமற்ற நிலையில்: நடவடிக்கை எடுக்குமா? நிர்வாகம்-Photos Reviewed by NEWMANNAR on November 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.