அன்ன யாவினும் கவிதை நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும் -படங்கள்
மன்னார் அமுதனின் “அன்ன யாவினும்” கவிதை நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும் 14.11.2015 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கமன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் சிவஸ்ரீ.தர்மகுமார குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினராக அருட்பணி.தமிழ்நேசன் அடிகளாரும் சிறப்பு விருந்தினர்களாக. மருத்துவர்.லோகநாதன், மருத்துவர்.அரவிந்தன், பொறியியலாளர்.இராமகிருஷ்ணண், கலாபூசணம் அ.அந்தோணிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்மொழி வாழ்த்தை திருமதி மைதிலி அமுதனும், வரவேற்புரையை கவிஞர்.ந.பிரதீப்பும், நூல் நயப்புரையை ஜே.சி.டிலானியும், குறும்பட விமர்சனத்தை எஸ்.ஏ.உதயனும், சிறப்புரையை கவிஞர்.மயூரனும், ஏற்புரையை மன்னார் அமுதனும், நன்றியுரையை திருமதி.வாசுவதா தில்லைநாதனும் ஆற்றினர். மேலும் ஸ்ரீசாகித்ய நடனக்கல்லூரி மாணவிகளின் நடனமும், இன்னிசைகீதங்களும் இந்நிகழ்விற்கு மெருகூட்டின.
அன்ன யாவினும் கவிதை நூல் வெளியீடும், குறும்பட காட்சிப்படுத்தலும் -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
November 16, 2015
Rating:

No comments:
Post a Comment