தலைமன்னாரில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி…
யாழ் இந்தியத்துணை தூதரகத்தின் ஆதரவில் தலைமன்னார் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும் சின்னக்கரைசல் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கமும இணைந்;து நடாத்திய இயல் இசை மாலை நிகழ்வு தலைமன்னார் அ.த.க.மு பாடசாலையில் 15-11-2015 அன்று மாலை நடைபெற்றது....
வரவேற்பு நடனம்
தீப நடனம்
பரத நாட்டியம்
மீனவர் நடனம்
கோலாட்டம்
கோலாட்டம்-2
செம்பு நடனம்
கரகம் (ஆடிவந்தேன்)
வேப்பிலை நடனம்
கோலாட்டம்-3
மீனவர் நடனம்-2
இசைச்சங்க நடனம் இசைநடனங்களும் இடம்பெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சிறுவர் மற்றும் மகளிர்விவகார இராஐhங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்
சிறப்பு விருந்தினர்களாக-
யாழ் இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஐன் அவர்களோடு அவரின் பாரியார் சாந்தி நடராஐனும்
மன்னார் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் கிரியந்த பீரிஸ்
இலங்கை கடற்படையின் மன்னார் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி லெப்ரினன்ற் தலுவத்த அவர்களோடு
பொதுமக்கள் கிராம அமைப்புக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். ...
இந்விகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சிறுவர் மற்றும் மகளிர்விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்கள் தனது உரையில்….
இப்படியான நிகழ்வுகள் மூலம் தான் மறைக்கப்படுகின்ற மறக்படுகின்ற எமது பாரம்பரிய இயல் இசை நாடகத்தினை காப்பாற்றக்கூடியதாகவுள்ளது.
எனவே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்த யாழ் இந்தியதுணைத்தூதரகதினருக்கும் தலைமன்னார் மற்றும் சின்னக்கரிசல் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக கலைஞர்களையும் பாராட்டுகிறேன்.
யுத்தமேகம் எம்மை விட்டு நீங்கினாலும் நாம் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாய சு10ழ்நிலைதான் வாழ்ந்து வருகின்றோம். அபிவிருத்தி திட்டங்கள் பொருளாதார மேம்பாடு சிறுவர் மற்றும் மகளிர் பிரச்சினைகள் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளோடு இயற்கையின் சீற்றத்தினின்றும் எம்மை காத்து வாழவேண்டிய அவசியம்
இது போன்ற இன்னும் பல நிகழ்வுகளை இந்தியத்துணைத்தூதரகத்தினர் ஏற்பாடு செய்து அழிந்து வருகின்ற கலைக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் அளிப்பதோடு வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்…. நடன நாட்டிய நிகழ்வுகள் மண்ணபத்தினுள் முழங்க வான் வெளியில் மழை தனது நடனத்தை பொழிந்து கொண்டிருந்தது மண்டபத்தினுள் இசை மழை வெளியில் வான் மழை இரண்டு மழைக்கும் இடையில் மக்கள் தீபாவளி சிறப்பு இயல் இசைமாலையை தொகுத்து வழங்கினார் மாலினி அஐந்தன் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது….
தலைமன்னாரில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி…
Reviewed by Author
on
November 16, 2015
Rating:

No comments:
Post a Comment