மன்னார் பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு-நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிப்பு
மன்னார் பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போது வைத்தியசாலை தரப்பினர் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது அசமந்த போக்குடன் செயற்படுவதாக மன்னார் வைத்தியசாலை தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் சிகிச்சைக்காக செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரிய தரப்பினரிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்ககளையும் மேற்கொள்ளாது வைத்தியசாலை தரப்பினர் அசமந்த போக்குடன்; செயற்படுவதாக மன்னார் மக்கள விசனம் தெரிவித்துள்ளனர்.
நேற்று மன்னார் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குச் சென்ற நோயாளர் ஒருவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் உரிய நேரத்திற்கு வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டி இல்லாததன் காரணத்தினால் இன்று காலை குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த வாரம் மன்னார் வங்காலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தின் போது படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலை தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்பட்டதோடு உரிய நேரத்தில் அம்புலன்ஸ் வண்டி இல்லாத நிலையில் பல மணி நேரத்தின் பின் குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது குறித்த இளைஞன் மிகவும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த இளைஞனின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தாமதித்த நேரத்தின் பின் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் காரணத்தினாலேயே குறித்த இளைஞன் ஆபத்தான நிலையில் தற்போது உள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிற்கும் இடையில் உள்ள பிரச்சினையின் காரணமாகவே மன்னார் பொது வைத்தியசாலையில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே அசமந்த போக்குடன் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் செயற்பட உயர் அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு-நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
November 04, 2015
Rating:

No comments:
Post a Comment