அண்மைய செய்திகள்

recent
-

பாரிஸ் தாக்குதல் எதிரொலி: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் ஐரோப்பிய நாடுகள்...


பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன சம்பந்தப்பட்ட அரசுகள்.
லண்டனில் அமைந்துள்ள Tooting Broadway Tube station-ல் திடீரென ஒருவர் கத்தரிக்கோல் காட்டி சகபயணிகளை அச்சுறுத்துவதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஆயுதப்படையினர், அப்பகுதியில் இருந்த மக்களை உடனடியாக வெளியேறுபடி உத்தரவிட்டுள்ளனர்.

இதனையடுத்து, பயணிகளை அச்சுறுத்திய அந்த நபரை தொடர்ந்து தேடியும், பொலிசாரிடம் சிக்காமல் அந்த நபர் தப்பியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆயுதப்படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர், ஆனால் பொலிசார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதேப்போன்று Copenhagen விமான நிலையத்தின் 3-வது முனையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெட்டி ஒன்றை கண்டெடுத்துள்ளதை அடுத்து,

வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில், அங்கிருந்த பயணிகள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பொலிசார், அப்பகுதியில் உள்ள பயணிகள் அனைவரையும் வெளியேற்றியுள்ளனர்.

மேலும் வெடிகுண்டு இருப்பதாக கூறப்பட்ட பெட்டியை தீவிரமாக சோதனையிட்ட நிபுணர்கள், அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்துள்ளனர்.

பாரிஸ் தாக்குதலை அடுத்து ஐந்தடுக்கு பாதுகாப்பில் இரண்டாவது கட்ட பாதுகாப்பை தற்போது அமல்படுத்தியுள்ளதாக டென்மார்க் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வத்திக்கானில் பீட்டர் சதுக்கத்தில் குவிந்த மக்களை பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்துள்ளனர்.

பாப்பானவரின் சிறப்பு கூடுகைக்கு வந்துள்ள கன்னியாஸ்திரிகள் முதல் புதுமண தம்பதியினர் வரை அனைவரையும் சோதனையிட்டுள்ளனர்.

இதனிடையே சிறப்பு கூடுகையில் பேசிய பாப்பானாவர், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் கதவுகள் ஒருபோதும் மூட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இருந்தபோதும், வத்திக்கானில் உச்சகட்ட பாதுகாப்பை அமல்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




பாரிஸ் தாக்குதல் எதிரொலி: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் ஐரோப்பிய நாடுகள்... Reviewed by Author on November 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.