தென் பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்...
இலங்கை தென் கடற்பரப்பில் நாளை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலிருந்து மர்மபொருள் விழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்இ இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஆகையால் குறித்த தினங்களில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்ல கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாளை 13 ஆம் திகதி வெள்ளிகிழமை முற்பகல் 11.48 மணிக்கு குறித்த மர்மபொருள் தென் கடற்பரப்பில் விழும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்பிரகாரம் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என் றும் அறிவித்துள்ளது.
தென் பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்...
Reviewed by Author
on
November 12, 2015
Rating:
Reviewed by Author
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment