வெள்ளை வேன் கலாசாரத்தின் 'பிதா மகன்" கோத்தபாயவே : மேர்வின் குற்றச்சாட்டு...
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வெள்ளை வேன் கலாசாரத்தின் பிதா மகன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் தொடர்பில் சாட்சியமளிக்க முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று நீதிமன்றில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பசில் ராஜபக்ஷ ஒரு முரட்டுதனமான மனிதர். அவரே வெள்ளை வேன் கலாசாரத்திற்கு காரணமானவர். இது உண்மை. இந்தை கருத்தை ஒரு போதும் மாற்றி கூறமாட்டேன் என்றார்.
வெள்ளை வேன் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேன்வின் சில்வா செய்த முறைப்பாடு மற்றும் தகவல்களுக்கு அமைவாக, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
2011 ஆம் ஆண்டு முகத்துவாரம் பிரதேசத்தில் வெள்ளை வேனில் மூவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வரும் நிலையில், கடத்தப்பட்ட மூவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் மேர்வின் சில்வாவை சாட்சிக்கு அழைக்குமாறு இதன் போது கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.
இது தொடர்பில் முழுமையான தகவலைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மேர்வின் சில்வா வழங்கவில்லை எனவும் கடிதம் மாத்திரமே வழங்கியுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் அறிவித்தது.
இந் நிலையில் வெள்ளைவேன் கடத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜனவரி 26 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் கலாசாரத்தின் 'பிதா மகன்" கோத்தபாயவே : மேர்வின் குற்றச்சாட்டு...
Reviewed by Author
on
November 12, 2015
Rating:
Reviewed by Author
on
November 12, 2015
Rating:


No comments:
Post a Comment